நாட்டிலேயே முதல் முறையாக தண்ணீர் பட்ஜெட்டை அறிவித்துள்ளது கேரளா அரசு.
கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கேரள அரசு தண்ணீருக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து, அதன் அடிப்படையில் இன்று கேரள சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது நீர் பட்ஜெட் தாக்கலை துவங்கி வைத்தார்.
பட்ஜெட்டை தொடங்கி வைத்த பினராயி விஜயன் பேசும்போது, ''கேரளாவில் 44 ஆறுகள், உப்பள கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் உள்ளன. கேரளத்தில் நல்ல மலை வளமும் உள்ளது. இருப்பினும் கேரளா தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஒட்டு மொத்த மாநிலத்தின் நீர் இருப்பு குறைந்து வருவதால் இருக்கின்ற வளத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதற்கு இந்த பொது நீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்றார்.