Published on 26/11/2018 | Edited on 26/11/2018
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. பாஜகவின் ஸ்டார்களாக கருதப்படும் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷா இன்று இந்தூரில் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ஆயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று சொல்லப்பட்ட இடத்தில், கண்டிப்பாக ராமர் கோவில் கட்டப்படும்” என்றார்.