Skip to main content

பொதுமக்கள் வன்முறையைக் கைவிட்டு, மைய அரசியலோடு இணைய வேண்டும்! - நிர்மலா சீத்தாராமன்

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
பொதுமக்கள் வன்முறையைக் கைவிட்டு, மைய அரசியலோடு இணைய வேண்டும்! - நிர்மலா சீத்தாராமன்

பொதுமக்கள் வன்முறையைக் கைவிட்டு, மைய அரசியலோடு இணைய வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார். 



இந்திய எல்லைக்குள் நுழையும் தீவிரவாதிகள், எல்லையில் இருக்கும் பாதுகாப்புப் படைவீரர்களின் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். இதற்கு பதில் தாக்குதல் கொடுக்கும் இந்திய வீரர்கள், பல தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துகின்றனர். இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிற்குள்  ஊடுருவ முயன்ற 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் கடைசி தீவிரவாதி வரை விட்டுவைக்கப் போவதில்லை. காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. பொதுமக்கள் வன்முறையின் பாதையைக் கைவிட்டு மைய அரசியலோடு வருவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் பேசியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்