இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
செவர்லெட், மேன் டிரக்ஸ் (Man Trucks), யுனைடெட் மோட்டார்ஸ் (United Motors), ஹார்லி டேவிட்ஸன் (Harley Davidson), ஃபோர்டு (Ford), ஃபியட் (FIAT), டட்சன் (DATSUN) ஆகிய ஏழு பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தங்களது ஆலையை மூடியுள்ளனர். இதனால் ஒன்பது ஆலைகள் மூடப்பட்டிருப்பதுடன் 649 விநியோகஸ்தர்கள் கடைகள் (Dealerships) மூடப்பட்டு, 84,000 பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை பிரச்சனைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அரசு செயல்படுத்தி வரும், அதே வேளையில் வெறுப்புமிக்க இந்தியாவும், அதாவது ஹேட் இன் இந்தியாவும் (Hate In India), மேக் இன் இந்தியாவும் (Make In India) ஒரே தளத்தில் இருக்க முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.