Published on 01/04/2020 | Edited on 01/04/2020
புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் டெல்லியில் நடந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் என்றும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகச் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
![puducherry coronavirus strength increased](http://image.nakkheeran.in/cdn/farfuture/YEiQhvxId1xmLm3J0knsDe2zKtVpzYqu0iooTz43Ung/1585711001/sites/default/files/inline-images/puducherry444.jpg)
ஏற்கனவே மாஹேவில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் கரோனா பாதிப்பு மூன்றாக உயர்ந்துள்ளது.