நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கியது.
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஊசி எதுவும் போடாமல் சுகாதாரப் பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி வந்த பிறகு எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இன்று (02/01/20201) சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்ற நிலையில், தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.