Skip to main content

துர்கா பூஜையில் பங்கேற்ற முஸ்லிம் பெண் எம்.பி.க்கு மதகுரு கண்டனம்!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் துர்கா பூஜையில் பங்கேற்று குங்குமம் வைத்து வழிபட்டார். இதை முப்தி ஆஸாத் குவாஸ்மி என்ற முஸ்லிம் மதகுரு கடுமையாக கண்டித்திருக்கிறார்.
 

புகழ்பெற்ற வங்க மொழி நடிகையும், மக்களவை உறுப்பினருமான நுஸ்ரத் துர்காவை வழிபட்டு, இஸ்லாமியர்களையும் இஸ்லாமையும் அவமதிக்கிறார் என்று மதகுரு தெரிவித்தார். இது பாவம் என்றும், தேவைப்பட்டால் நுஸ்ரத் தனது பெயரையும் மதத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Participated in the Durga Puja   Muslim woman MP denounce is cleric

 

துர்கா பூஜையில் உற்சாகமாக பங்கேற்ற நுஸ்ரத், ட்ரம்ஸ்களை அடித்து நடனமாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நுஸ்ரத், நாட்டு மக்களின் அமைதிக்காகவும், வளத்திற்காகவும் பிராத்தனை செய்ததாக கூறினார். வங்கத்தில் மக்கள் அனைவரும் எல்லா பண்டிகைகளையும் ஒன்றாக இணைந்தே கொண்டாடுகிறோம். இத்தகைய கொண்டாட்டத்தில் பங்கேற்பதை நான் சந்தோஷமாக கருதுகிறேன். சர்ச்சைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஒன்றுபட்ட இந்தியாவை பிரதிபலிக்கவே விரும்புகிறேன் என்றும் விளக்கம் அளித்தார்.


 

 

இதனிடையே மதகுருவின் கண்டனம் குறித்து, உத்தரப்பிரதேச வக்ப் வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வியிடம் கேட்டபோது, நுஸ்ரத் மட்டுமல்ல யாராக இருந்தாலும் குங்குமம், பிந்தி, தாலி அணிவதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்றும், இஸ்லாமியர்கள் மற்ற மதத்தில் இணைய விரும்பினால் இணையலாம் என்றும், யாரையும் இஸ்லாமிலிருந்து தூக்கி வீச மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

 

west bengal durga



 

சார்ந்த செய்திகள்