மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, பரூக் அப்துல்லா, சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சூரன் ஆகியோர் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எல்கர் பரிஷத் விவகாரத்தில் பொய் வழக்கு புனையப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதித்து உடல்நிலை மோசமான நிலையிலும் ஸ்டேன் சுவாமி விடுவிக்கப்படவில்லை. பீமா கோரேகான் வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பீமா கோரேகான் வழக்கில் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.