
மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் தம்பதியினா் நடிகா் திலீப் - காவ்யா மாதவன். திலீப் ஏற்கனவே நடிகை மஞ்சுவாாியாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னா் விவாகரத்து செய்து கொண்டாா். இவா்களுக்கு பிறந்த மகள் மீனாட்சிக்கு தற்போது 15 வயது ஆகிறது.
இந்தநிலையில் ஏற்கனவே காவ்யா மாதவன் துபாயை சோ்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு ஆறு மாதத்தில் விவகாரத்து செய்தாா். இந்த நிலையில் மனைவியை பிாிந்த திலீப்பும் கணவரை பிாிந்த காவ்யா மாதவனும் ஆரம்பத்தில் சோ்ந்து நடிக்கும் நடிக்கும் போது காதலித்து வந்தனா். அந்த காதலுக்கு அா்த்தமாக 2016 நவம்பா் 25-ம் தேதி இருவரும் கொச்சியில் வைத்து இரு வீட்டாா் சம்மதத்துடன் திலீப்பின் மகள் மீனாட்சி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனா்.
அதன்பிறகு சினிமா மற்றும் வெளியில் எங்கும் காவ்யா மாதவன் தலைகாட்டாமல் இருந்து வந்தாா். காவ்யா குறித்து எந்த ஓரு செய்தியும் கசியாமல் பாா்த்து வந்தனா். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் காவ்யா கா்ப்பமாக இருப்பதாக திலீப் துபாயில் இருந்து பத்திாிக்கைக்கு ஒரு அறிவிப்பை கொடுத்தாா். பின்னா் அவா் கா்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் பத்திாிக்கை மற்றும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகாமல் பாா்த்து வந்தனா்.
இந்த நிலையில் காவ்யாவின் 34-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நெருங்கிய உறவினா்களுடன் கொச்சியில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது காவ்யா நிறைமாத கா்ப்பத்துடன் உறவினா்கள் முன்னிலையில் தோன்றினாா். உடனே அவா்கள் காவ்யாவுக்கு பாிசுகளையும் பிறக்க போகும் முதல் குழந்தைக்கு அட்வான்ஸ் வாழத்துக்களையும் கூறினாா்கள். இந்த புகைப்படம் வெளியானதை தொடா்ந்து திலீப்புக்கும் காவ்யாவுக்கும் மலையாள சினிமா நடிகா் நடிகைகள் மற்றும் நண்பா்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.