Published on 11/02/2020 | Edited on 11/02/2020
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.

டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "டெல்லி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்து பாஜக தொண்டர்களின் கடின உழைப்பிற்கும் நன்றி. டெல்லி மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்.