லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக மட்டம் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின் போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடக போன்ற மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன. இந்நிலையில், அதேபோன்ற சட்டம் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் கொண்டுவரப்படுமென அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போபாலில் பேசிய அவர், "லவ் ஜிகாத் மூலம் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இதைத்தடுக்க அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.