ஆந்திர மாநிலம் சித்தூர் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் கல்கி ஆசிரமம் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் வராத நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கோவர்தனத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கிய நிலையில் கணக்கில் வாராத 43.9 கோடி ரூபாய் இந்திய பணம், 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.