தெலங்கானா மாநிலத்தில் அரசு எஞ்சினியர் தனது அலுவலகத்தில் நான் ஊழல்வாதி அல்ல என்று போர்டு வைத்திருக்கிறார்.
அண்மையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்பூரமெட் என்னும் பகுதியில் வட்டாட்சியராக பணிபுரிந்த விஜய் ரெட்டி என்னும் பெண் லஞ்சம் கேட்டதாக உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டாட்சியரான விஜயா ரெட்டி நிலப்பத்திர பதிவுக்காக சதிஷ் என்ற விவசாயியிடம் லஞ்சம் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், விவசாயி சதிஷ், வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிலர் வட்டாச்சியர் லஞ்சம் கேட்டார் என்று சொல்கின்றனர். சிலர் அவர் நேர்மையானவர் என்றும் சொல்கின்றனர். முறைகேடான நிலப்பிரச்சனை ஒன்றை நீண்ட காலமாக கிடப்பில் போட்டதால பாதிக்கப்பட்ட சதீஷ் என்பவர், அவரை உயிருடன் கொளுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கரிம் நகர் என்னும் பகுதியில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர் பொதேதி அஷோக், நான் ஊழல்வாதி அல்ல என்று ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் போர்டு வைத்துள்ளார். இது தனக்கு லஞ்சம் தரலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதற்காக இவ்வாறு போர்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.