15- வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்ப்புறம், கிராமப் புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களுக்கு ரூபாய் 8,453.92 கோடியை மத்திய நிதியமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக 805.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
அதன்படி, ஆந்திர பிரதேசம்- ரூபாய் 488.15 கோடி, அருணாச்சலப் பிரதேசம்- ரூபாய் 46.94 கோடி, அசாம்- ரூபாய் 272.25 கோடி, பீகார்- ரூபாய் 1116.30 கோடி, சத்தீஸ்கர்- ரூபாய் 338.79 கோடி, ஹிமாச்சல் பிரதேசம்- ரூபாய் 98.00 கோடி, ஜார்க்கண்ட்- ரூபாய் 444.39 கோடி, கர்நாடகா- ரூபாய் 551.53 கோடி, மத்திய பிரதேசம்- ரூபாய் 922.79 கோடி, மகாராஷ்டிரா- ரூபாய் 778.00 கோடி, மணிப்பூர்- ரூபாய் 42.87 கோடி, மிசோரம்- ரூபாய் 31.19 கோடி, ஒடிசா- ரூபாய் 461.76 கோடி, பஞ்சாப்- ரூபாய் 399.65 கோடி, ராஜஸ்தான்- ரூபாய் 656.17 கோடி, சிக்கிம்- ரூபாய் 20.97 கோடி, தமிழ்நாடு- ரூபாய் 805.92 கோடி, உத்தரகாண்ட்- ரூபாய் 150.09 கோடி, மேற்கு வங்கம்- ரூபாய் 828.06 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.