Skip to main content

வரலாற்று புத்தகத்தில் காந்தி இல்லை, பதிலாக ரஷ்ய தலைவர்கள்தான்- சர்ச்சை முதலமைச்சர்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
biplab


நேற்று காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் கூறுகையில், ”இன்று பள்ளி மானவர்களுக்கு கொடுக்கப்படும் பாடத்திட்டங்களில் இந்திய வரலாறு என்று ஒன்றுமே இல்லை. தற்போது இருக்கும் வரலாற்று புத்தகங்களில் லெனின், ஸ்டாலின் மற்றும் ரஷ்ய புரட்சி பற்றிதான் இருக்கிறது. எனக்கு அதுபற்றி பிரச்சனை இல்லை. ஆனால், அங்கு காந்தி பற்றியும் இருக்க வேண்டும். நம் அரசாங்கம் என்சிஆர்டி பாடத்திட்டத்தை திருத்துவது பற்றி முடிவெடிக்க வேண்டும் மற்றும் வருகின்ற கல்வியாண்டிலேயே அதை அமல்படுத்த வேண்டும்” என்றார். இவர் இதற்கு முன்னதாக பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்