Skip to main content

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு!

Published on 15/08/2018 | Edited on 15/08/2018

 

VAJIPAYEE

 

 

 

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல் நலம் குன்றியதான் காரணமாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல்நலம் மோசடைந்துள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

அவரது உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகாரணங்களுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை  அடுத்து அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

சார்ந்த செய்திகள்