Published on 08/08/2021 | Edited on 08/08/2021
சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் பிளாஸ்டிக்கால் ஆன தேசியக்கொடிகளின் பயன்பாட்டை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் ஆனால் பிளாஸ்டிக் கொடிகளால் அது சாத்தியமாவதில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்திய பிறகு அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள உள்துறை அமைச்சகம், சுதந்திர தினம் தவிர மற்ற அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.