ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா பிரிவிற்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் நிர்வாக இயக்குனர் பதவி காலியாக இருந்து வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை உமங் பேடி (Umang bedi) என்பவர் நிர்வாக இயக்குனராக இருந்தார். இவர் நியமிக்கப்பட்டு பதினைந்து மாதங்களிலே ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நிறுவனத்தைவிட்டு வெளியேறியபின் அந்தப் பதவி இந்த வருடம்வரை காலியாகதான் இருந்துவருகிறது. தற்போது இதற்கு புதிதாக ஹாட்ஸ்டாரின் (Hotstar) தலைமை செயல் அதிகாரியாக இருந்த அஜித் மோகன் என்பவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா பிரிவிற்கு நிர்வாக இயக்குனராகவும் மற்றும் துணைத் தலைவராகவும் நியமித்து ஃபேஸ்புக் நிறுவனம் அறிக்கைவிடுத்துள்ளது. மேலும் இவர் 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அந்தப் பதவிவகிப்பார் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.