Published on 29/06/2022 | Edited on 29/06/2022
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியத் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்பொழுது இந்தியத் துணை குடியரசுத் தலைவராக இருக்கக்கூடிய வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் நாட்டின் 16 ஆவது துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.