Skip to main content

முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் - நாங்க என்ன செய்ய முடியும் என கைவிரித்த அதானி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

ி

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து துறைமுகத்திற்கு வந்த அனைத்து கண்டெய்னர்களையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இதில் 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 21 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்ததில் இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் தற்போது வரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். 

 

இதற்கிடையே அதானிக்கு சொந்தமான இந்த துறைமுகத்தில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி மற்றும் பாஜகவை கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த ஆட்சியே அதானிக்காக நடத்தப்படுவதாக பலமுறை குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பு பதிலளித்துள்ளது. அதில், " இந்திரா, ராஜூவ் காந்தி விமான நிலையத்தில் போதைபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டால் அதற்கு ராஜூவ், இந்திரா காரணம் என்று கூறுவதை போல இருக்கிறது என காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அதானி நிறுவனம்,"கண்டெய்னரில் வரும் எந்த ஒரு பொருட்களையும் பிரித்து பார்ப்பதற்குரிய அதிகாரம் துறைமுக நிர்வாகத்திடம் இல்லை. அரசு துறை அதிகாரிகளுக்கு மட்டும்தான் அதற்கான அதிகாரம் இருக்கிறது. எனவே அதற்கான அதிகாரம் இல்லாத நிலையில் எங்களை குறை கூறுவது ஏற்கும்படியாக இல்லை" என்று தெரிவித்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்