ஹைத்ராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஹைத்ராபாத்திலுள்ள கோகுல்சாட் மற்றும் லும்பினி பார்க் என்ற இடத்திலுள்ள திறந்தவெளி திரையரங்கில் வெடித்த குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் ஏறக்குறைய 50 பேர் படுகாயமடைந்தனர்.19 குண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் வெடிக்காமல் கைப்பற்றப்பட்டது. பரபரப்பாக பேசப்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என விசாரணையில் தெரியவர அது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த இரட்டைகுண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஹைதராபாத் மெட்ரோபாலிடன் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி என்ற இருவரை குற்றவாளிகள் என அறிவித்தது. மற்ற மூன்று பேர்களில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது நபருக்கான தீர்ப்பையும், குற்றவாளிகளுக்கான தண்டனையையும் வரும் 10-ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.