Skip to main content

‘மீட்புப் பணியில் தாமதம்...’ - சுரங்க விபத்து குறித்து மீட்புக் குழுவினர் தகவல்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Delay in Rescue team informs about mine incident

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்கியான என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/11/2023) அன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து இந்த நிகழ்ந்துள்ளது.

 

மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சரிந்து விழுந்த பாறைகளை சிறிதளவு அகற்றிவிட்டு குழாய்கள் மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. தாய்லாந்தில் குழந்தைகள் சிக்கிய 12 சிறுவர்களை மீட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இது குறித்து மீட்புக் குழுவினர் தெரிவிக்கையில், “சரிந்து விழுந்த பாறைகளை அகற்ற ஏற்கனவே கொண்டு வரப்பட்ட துளையிடும் இயந்திரம் உடைந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சரிந்த பாறைகளை அகற்றும் பணியில் தற்போது அமெரிக்க இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் மணிக்கு 4 முதல் 5 மீட்டர் வரை ஊடுருவக் கூடியது. ஏற்கனவே 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மீட்புப் பணி மேலும் 3 நாட்கள் தாமதம் ஏற்படலாம்” என தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்