உலகத்தை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவாலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28 நாட்களில், 15 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை. கடந்த 14 நாட்களில், 80 மாவட்டங்களில் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் 3ம் நிலைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.