உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்த கர்நாடகாவில் தற்போது அதிரடியாகக் கரோனா பரவி வருகின்றது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டும் அம்மாநில அரசால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவில் இன்று மேலும் 8,706 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,03,200 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 103 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,613 ஆக உயர்ந்துள்ளது.