உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளி ஹாஸ்டலைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாலியல்வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், இந்த விஷயத்தை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கரூவை கலைக்கும் மாத்திரையை கொடுக்க கட்டாயப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உண்டு உறவிடப் பள்ளி ஒன்று இருக்கிறது. அப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி(16 வயது) கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த சுதந்திர தின விழாவிற்காக முந்தைய நாள் தயாராகி கொண்டிருக்கும் போது, அதே பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு ஹாஸ்டல் மாணவர்கள் நான்கு பேர் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர், மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் அவரை ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது 16 வயது மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அந்த மாணவிக்கு கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை கட்டாயமாக கொடுத்துள்ளது. இச்சம்பவங்களை சில தினங்களுக்கு முன்பு, அந்த மாணவி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி ஹாஸ்டலுக்கு வந்த பெற்றோர், மாணவியை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகி அவரது மனைவி, ஹாஸ்டல் வார்டன், காவலர் உள்ளிட்ட 5பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்களுக்கும் 17 வயது என்பதால், அவர்களை கைது போலிஸார் விசாரித்து வருகின்றனர்.