Published on 16/04/2019 | Edited on 16/04/2019
வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தேர்தல் ரத்து செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். வேலூரில் துரைமுருகன் மற்றும் திமுகவினர் வீடுகளில் முக்கிய ஆவணங்களூம், கட்டுக்கட்டாக பணமும் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கடந்த 14ம் தேதி அன்று தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இப்பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.