Published on 27/01/2019 | Edited on 27/01/2019

மதுரை தோப்பூரில் 1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. இதை முன்னிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு மதுரை வந்தார் பிரதமர் நரேந்திரமோடி. அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், வைகோ மற்றும் மதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.