Skip to main content

சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி!

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
sitaram

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி இதுதான்:

 

  கட்சியின் அகில இந்திய மாநாடு கடந்த 4 நாட்களாக விஜயவாடாவில் நடைபெற்றது.  இறுதியாக கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் போட்டி வந்தபோது கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஆன பிரகாஷ்காரத்  கொடுத்த வரைவு அறிக்கையும் சீதாராம் யெச்சூரி கொடுத்த அறிக்கையும் மிக முக்கியமான விவாதப்பொருளாக மாறியது.  சீதாராம் யெச்சூரி அகில இந்திய அளவில் இப்போதுள்ள நிலையில்  முதல் எதிரி பாரதிய ஜனதாதான் . ஆகவே பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் நம் கட்சி ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என தனது அரசியல் அறிக்கையில் கூறியிருக்கிறார்.  ஆனால், பிரகாஷ் காரத் கொடுத்த அரசியல் வரைவு அறிக்கையில் இந்தியா முழுக்க பாஜகவும் காங்கிரசும் இரண்டு கட்சியும் ஆபத்தானவை. ஆகவே இரு கட்சிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாற்று அணியாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது நீண்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

 

 இந்த இரு அறிக்கைகளும் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கடுமையாக விவாதம் நடத்தினார்கள்.  ஒரு கட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி கேரளாவுக்கு மட்டும் சொந்தமா? என விவாதம் போனது.  மூத்த தோழர்கள் தலையிட்டு யெச்சூரி மற்றும் பிரகாஷ்காரத் கொடுத்த அறிக்கைகளை ஆய்வு செய்து இன்றைய சூழலில் ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தமாதிரி அந்தந்த மாநில கமிட்டிகள் முடிவெடுக்க வேண்டும்.   அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு நேர் எதிரான நிலையும் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் உள்ள கட்சிகளோடு கூட்டணி ஏற்படுமாயின் அப்போது காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்தனர்.

 

ஒரு வகையில் பிரகாஷ்காரத் கொடுத்த வரைவு அறிக்கையை நிராகரிக்காமல் சீதாராம் யெச்சூரி கொடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் தேவையற்ற குழு மனப்பான்மையை வளர்க்காமல் இதை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு நிகழ்வாக மீண்டும் இரண்டாவதுமுறை சீதாராம் யெச்சூரியை அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜக அரசு விவசாயிகள் குறித்து எந்த கவலையும் கொள்ளவில்லை” - சீதாராம் எச்சூரி

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

The BJP government does not care about the farmers

 

நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை (தனி) தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலிக்கு வாக்கு கேட்டு, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

 

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான், அதில் மாற்றம் இல்லை. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 42 பேர் உயிர் துறந்து தியாகம் செய்த நிகழ்வை அறிவோம். அதேபோலதான் டெல்லியில் விவசாயத்திற்காக, விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இதுவரையில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். ஆனால் பாஜக அரசு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

 

ரயில்வே, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் இளைய தலைமுறை பெரும் பாதிப்பை அடையும், தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களைப் போல பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு, மனித உரிமை மீறப்படுகிறது. இந்த நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

 

முன்னதாக, திருக்குவளையில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி இல்லத்திற்குச் சென்று அங்கு உள்ள நூலகம் மற்றும் திருவுருவப் படங்களை அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஜம்மு காஷ்மீரில் தடுத்து நிறுத்தப்பட்ட மற்றுமொரு தலைவர்...

Published on 09/08/2019 | Edited on 30/10/2019

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

 

sitaram yechuri detained at srinagar airport

 

 

இதனையடுத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையை குவித்தது மத்திய அரசு. மேலும் காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகும், முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி  உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஸ்ரீநகரில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்ய ஜம்மு- காஷ்மீர் சென்றார். ஆனால் அவரை, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது ராணுவம். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு, குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார் என கூறியது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து பேசுவதற்காக இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் வந்தார். ஆனால் அவரும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.