திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருப்பவர் ஜெயக்குமார், உலக சாதனை நிகழ்ச்சியென ஒரு லட்சம் மாணவர்களை செய்தித்தாள் வாசிக்க வைத்து கட்டுரை எழுத வைத்தது, பெரிய அளவில் திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் புத்தக திருவிழா நடத்தியது, கல்வியில் பின்தங்கிய இந்த மாவட்டத்தை தேர்ச்சி பெற வைக்க முயன்று முன்னுக்கு கொண்டு வந்தது என பாராட்டுக்கள் ஒரு புறம் பெற்றாலும் மற்றொரு புறம் ஆசிரியர் – ஆசிரியைகள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த ஜீலை 11ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் திரண்டனர். மை சைல்டு மை கேர் என்கிற திட்டத்தின் கீழ் ரசீது ஏதும்மில்லாமல் பணம் வாங்கி லட்ச கணக்கில் முறைகேடு செய்தது, பருவ தேர்வு விடைத்தாள்களை வாங்கி விற்று பல லட்ச ரூபாய் முறைகேடு செய்ததை அரசு விசாரிக்க வேண்டும், ஆசிரியர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு ஆராயும் சிஇஓ ஆப் என்ற செயலியை வன்மையாக கண்டிக்கிறோம், பெண் ஆசிரியைகளை ஒருமையில் பேசுவதை கண்டிக்கிறோம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கின் நிர்வாக மாறுதலை தடை செய்வதை கண்டிக்கிறோம், விளம்பர பிரியராக உள்ள சி.இ.ஓவை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த கண்ட ஆர்ப்பாட்டத்துக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் – ஆசிரியைகள் வருகை புரிந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இயக்க நிர்வாகிகள், சிஇஓவை கடுமையாக விமர்சித்து பேசினர். சி.இ.ஓ தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் எங்களது போராட்டம் இன்னும் தீவிரமடையும், திருவண்ணாமலை மட்டும்மல்லாமல் தமிழகம் முழுவதும் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.