Published on 24/12/2018 | Edited on 24/12/2018

நெம்மேலியிலுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் அந்த நாட்களில் தண்ணீர் விநியோகம் இருக்காது என்றும் இதனால் சென்னையிலுள்ள மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இதனால் முன்கூட்டியே தண்ணீரை சேமித்துவைத்துக்கொள்ளுங்கள் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.