ஏப்ரல் 5ம் தேதி காலை நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் மாணவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பல சென்டர்களில் நீட் தேர்வு எழுவதற்கு 5 பேருந்துகளில் அனுப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான இந்த பேருந்து வசதியை மட்டும் செய்து கொடுத்து விட்டு தன் கடைமை முடித்துக் கொண்டார் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் தந்தூரி. இவர்கள் தவிர மேற்படி மூன்று மாவட்டங்களிலிருந்து தனித்தனியாகவும், வேன் மூலமாகவும் கேரளா நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 2300ஐ தாண்டுக்கிறது.
தன் பிள்ளை நல்லபடியாக நீட் தேர்வு எழுத வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு மாணவனின் தாய் தந்தையாரும் அவர்களுடன் சென்றிருக்கிறார்கள். நெல்லையிலிருந்து அவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் நீட் சென்டரை அடைய சுமார் 370 கி.மீ பயணப்பட வேண்டிருக்கிறது. புதிய இடம், பழகி அறியாத மக்கள், புதியமொழி, மாறுபட்ட சூழல்கள். இவைகள் வெளிப் பகுதியை அறியாத மாணவர்களின் மனதைச் சிதைந்து விடும்.
பயம், பதட்டம், படப்படப்பு, இந்த உணர்வுகளே மாணவர்களை ஆக்கரமித்துக் கொள்ளும் சூழலில் அவர்களால் எவ்வாறு நீட் தேர்வை எழுத முடியும். சாதாரண இந்த மன உளவியல் கூட அரசுக்கு தெரியவில்லையா. அவர்கள் பாடுபட்டது வீணாகிவிடுமோ என்கிற அச்சத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சங்கரன்கோவில் நகரில் முதன்மையான மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஒருவர். அதனையே அறிக்கையாக அரசுக்கும் மாவட்ட ஆட்சியாருக்கும் அனுப்பியிருக்கிறார்கள் மெட்ரிக் பள்ளிகளின் தலைமை பொறுப்பாளர்.
நீட் தேர்வில் மாணவர்களின் நலன் மீது அக்கறை கொள்ளலாமல் தமிழக அரசு நடந்துக் கொண்ட அதே நேரத்தில், கேரளா முதல்வர் பினராய் விஜயன், கேரளா வரும் வெளி மாநில மாணவர்களுக்கான கோட்டையம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து சென்டர்களிலும் அவர்களிடம் சோதனை என்ற கெடுப்பிடி கூடாது. அவர்கள் சென்டர் உள்ளே செல்கிற வகையில் நெருக்கடி தராமல் அனுப்பிவைக்க வேண்டும். தேவை என்று எந்த உதவி கேட்டாலும் செய்து கொடுக்க வேண்டும் குறிப்பாக அவர்களின் பாதுகாப்பு முக்கியம், அவர்களின் மனநிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று தொடர்புடைய ஐந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டுருக்கிறார்.
இது தவிர கேரளாவின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ. குறிப்பிட்ட அந்த ஐந்து மாவட்ட சென்டர்களிலும் ரெயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள் தோறும் ஒவ்வொரு குழுவாக நின்றுக் கொண்டு தேர்வுக்கு வரும் பிற மாநிலங்களில் மாணவர்களுக்கு உதவுகிற வகையில் அவர்கள் தாமதமில்லாமல் செல்லவேண்டிய சென்டரில் சேர்க்கவும் தேவைப்பட்டால், தங்மிடம் உணவு போன்ற உதவிகளையும் செய்வதற்காக தாயராக இருக்கிறார்கள்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் எந்தொரு வகையிலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை எங்கள் நோக்கம் என்கிறார்கள் எஸ்.எப்.ஐ. அமைப்பினர்.