இன்று மக்களவை தொகுதியின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 14.22 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
![voting](http://image.nakkheeran.in/cdn/farfuture/STfCCvVTUV-bp4kpmeWxebLTJ3TruQ2uu6VBcfFoHrg/1554949863/sites/default/files/inline-images/voting-c.jpg)
சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலுள்ள 1 மக்களவை தொகுதிக்கும் தொகுதிக்கும், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள தலா 2 தொகுதிகளுக்கும், பீகார், ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், உத்திரகாண்ட், அசாமில் 5 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவிலுள்ள 7 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 தொகுதிகளுக்கும், ஆந்திராவின் 25 மக்களவை தொகுதிகளுக்கும், யூனியன் பிரதேசங்களான அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளிலுள்ள 1 மக்களவை தொகுதி ஆகியவற்றில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 மாநிலங்களிலுள்ள, 91 மக்களவை தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவிலுள்ள 175 தொகுதிகள், அருணாசல பிரதேசத்தின் 60 தொகுதிகள், சிக்கிமிலுள்ள 32 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவிலுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இவற்றுள் சில மாநிலங்களுக்கு பலகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.