வட கிழக்கு மாநிலங்களான, மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
மேகாலயாவில், 10 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் முதல்வர், முகுல் சங்மா. திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலைவர், மாணிக் சர்க்கார் முதல்வராக உள்ளார்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில், சட்டசபை பலம், தலா, 60. இருப்பினும், மூன்று மாநிலங்களிலும், தலா, 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. இந்நிலையில், மூன்று மாநிலங்களிலும், இன்று காலை, 8:00 மணிக்கு, பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், திரபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.