Published on 01/04/2020 | Edited on 01/04/2020

ஊரடஙகையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மூன்று புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.