தினமும் காலை, மாலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி நெல்லை கண்ணன் கையெழுத்திடவேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டது நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நெல்லை பங்கேற்று, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் அவதூறாக பேசியதாக மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்றும் நெல்லைகண்ணன் கோரினார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மறு உத்தரவு வரும் வரையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிபந்தனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் மீண்டும் கோரப்பட்டது. அதையடுத்து, நீதிபதி ரசீர் அகமது, ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நெஞ்சுவலி மற்றும் மூச்சித்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லைகண்ணன் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.