Skip to main content

ஸ்டாலினுக்குத் தூது விடும்...!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021
ddd

 

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றம் வரும் என்று பல தரப்பும் அழுத்தமாக நம்பும் நிலையில், மாநில உளவுத்துறை, இப்ப எடப்பாடிக்கு வேறுமாதிரியாக ரிப்போர்ட் கொடுத்துள்ளது. 

 

தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.யான ஈஸ்வர மூர்த்தி, முதல்வர் எடப்பாடிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார். அதில் 120 சீட் வரை அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கலாம்னு சொல்லியிருக்கார். அதேசமயம் எதிர்த்தரப்பு, ஏக உற்சாகத்தில் இருக்கிறது. அவர்கள் தரப்பை இப்பவே அதிகாரிகள் பலரும் மூவ் பண்றாங்கன்னும் செய்தி வருதுன்னு ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எஸ்.பி. சி.ஐ.டி.யின் கீழ்நிலை அதிகாரிகள், எந்த அடிப்படையில் டேட்டா சேகரிச்சாங்கன்னும் உயரதிகாரி உள்பட பலரும் ஆய்வு செய்து வருகிறார்கள். 

 

அதிகாரிகள் தரப்பு எதிரணியை அணுகுகிறதா, எதை வைத்து எடப்பாடி சொல்கிறார் என விசாரித்தபோது, "அதிகாரிகள் மத்தியிலேயே பகிரங்கமாகவே இப்படியொரு டாக் இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும், அடுத்து அமையும் ஆட்சியில் நல்ல போஸ்ட்டிங் வேணும்னு ஸ்டாலினுக்குத் தூது விடறாங்களாம். குறிப்பா அ.தி.மு.க.வின் சீனியர் அமைச்சர் ஒருவரிடம் பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ’புலவர்’ பெயர்கொண்ட ஒரு அதிகாரி, ஸ்டாலினை அவர் மருமகன் சபரீசனின் நண்பர்கள் மூலம் அணுகி, நீங்கள் முதல்வரானால் என்னை உங்க பி.ஆர்.ஓ.வா வச்சிக்கங்கன்னு இப்பவே மனு போட்டிருக்காராம். இப்படி கிச்சன் டீம் மூலமும் பலரும் அணுகி வருகிறார்களாம்.