Skip to main content

போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடியாது... மே தின வரலாறு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

g


போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடிவதில்லை. பிறந்த குழந்தை கூட பசிக்காக அழும் போது தன் முதல் போராட்டத்தைத் தொடங்குகிறது அதனை அறியாமலேயே, பின் மூன்று மாதங்களில் குப்புற விழும்போதும், நடை பயிலும் போதும் சின்னச் சின்ன கீறல்களில் அதன் போராட்டத் தழும்புகளைக் காணலாம். நாம் பிறக்கும் போதே போராட்டக் குணம் நம்மில் ஒட்டிக்கொண்டதாலோ என்னவோ உணவிற்கும் உடைக்கும் இதோ இப்போது கரானோவின் அபாயாத்திற்கும் சேர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. இன்றைய போராட்டங்கள் மனிதனோடு இல்லை, கண்ணுக்குத் தெரியாத கரானோவோடு நம்மை நெருக்கும் மனிதர்களோடு, நம் கூடவே பிறந்த அடிவயிற்றுப் பசியென்னும் அரக்கனோடு, ஒருவேளை உணவிற்காக ஜகத்தை அழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு நாம் என்ன பாரதியாரா அவரையே இறந்த பிறகுதானே மதித்தோம் ஆனால் காற்றும் இயற்கையும் அவனின் கிறுக்கல்களை ஓவியமாய் நமக்கு முன்பே கொண்டாடியது. 


இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம், பிரான்ஸில் ஜனநாயம் அல்லது மரணம் என்ற கோஷப் போராட்டம் எல்லாமே தோல்வியில் முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வெற்றியும் பெற்று மைல்கல்லாக ஆனது. ரஷ்யா, அமெரிக்கா, சிகாக்கோவில் ஜூன் 1886- இல் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு ஹேமார்க்கெட் படுகொலை இப்போதும் அங்கே நினைவுச்சின்னமாய் உழைப்பாளர்களின் போராட்டத்தை நமக்கு நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் தூக்கில் இடப்பட்ட தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் வேலை நேரப் போராட்டமும், சிகாககோவின் தியாகமும் தான் இன்று உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன் முதலில் தொழிலாளர்தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான தோழர் ம. சிங்காலவேலர் 1923- இல் சென்னை அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்கள். அதன் நினைவுச் சின்னம்தான் மெரினாவின் உழைப்பாளர்கள் சிறை நாளை மீண்டும் ஒரு உதய நாளைக் கொண்டாடக் காத்திருக்கிறது. 

சென்னையில் எத்தனையோ சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை எல்லாமே மத ரீதியாகவோ அல்லது ஒரு தனி மனிதம் மற்றும் அரசியல் அபிமானத்திற்காகவோ வைக்கப்பட்டு இருக்கும். சில இதில் விதிவிலக்கு. அவைகள் பராம்பரிய முறைமையை விளக்குவதற்கு இருக்கும். இறந்து போன விலங்குகளின் சிலைகள் கூட உண்டு. எல்லாச் சிலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சிறப்புகள் இருந்தாலும் நம் மெரினா உழைப்பாளர் சிலைக்குத் தனி சிறப்பு உள்ளது. இது ஒரு மதத்தையோ இனத்தையோ ஜாதியையோ குறிக்கவில்லை, ஒட்டுமொத்த உழைக்கும் சமுதாயத்தையே குறிக்கிறது. காலம் தொடங்கிய போதிலிருந்து முதலாளித்துவம் அதற்கு அடங்கியாளும் தொழிலாதித்துவமும் தொடங்கிவிட்டது. மே தினத்தின் வரலாறு என்னவோ 8 மணி நேர வேலையின் தொடக்கத்தை உண்டாக்குவதுதான் என்றாலும் சில நேரங்களில் அதிகமாக வேலை செய்வதற்காகப் பணத்தைக் கொடுத்து எதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினார்களோ அதையே மீண்டும் ஏற்றுக்கொள்ள வைத்தார்கள். அப்படித்தான் OT என்ற அதிகப்படியான வேலை அதேபோல் ஷிப்ட் முறையில் வேலையைச் செய்வது, நாம நம்மை அடக்குகிறார்கள் என்று எதிர்க்கிறோம் ஆனால் அதையே நாம் நம்மை அறியாமலேயே பணத்திற்கோ பிற பொருளுக்கோ அடங்கி ஏமாற்றப்பட்டு வருகிறோம் தினம் தினம். 

 

j


 

http://onelink.to/nknapp


மாதம் ஒரு நாளைய சந்தோஷம் மாதம் முழுமைக்கும் அவர்களுக்கு இருக்குமா என்பது தெரியாமலேயே இருந்தது ஆனால் திருப்தி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் உழன்று கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.  மே 1 தொழிலாளர்கள் வெற்றி நாளாய் உலகம் முழுக்க பரவ போராட்டம் தொடங்கி 33 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த லாக்டவுன் மீண்டும் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுத்தான் இருக்கிறது எதற்கு? நேரம் காலம் இல்லாமல் வேலை செய்யத் தங்களைத் தாங்களே அடிமைகளாக்கிக் கொள்ள வாழ்ந்தாக வேண்டுமே என்ற நிலையிலேயே நாளைய தொழிலாளர் தினமும் தொழிலாளிகளுக்கு வழக்கமான நாளாகவே நிறைந்திருக்கப் போகிறது.  உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!