தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பொதுமக்கள் மீது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. மேலும் ரஜினி, கமல் மற்றும் பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில் ஏற்கனவே காவிரி பிரச்சனையில் ''யுனைட் பார் ஹுமானிட்டி'' என்று பரபரப்பை கிளப்பிய நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசியுள்ளார். மேலும் ஏன் இந்த வீடியோவை ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளேன் என விளக்கமும் அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கருத்து ''மொழி'' எனும் பாகுபாட்டை கடந்து அனைவருக்கும் தெரிய வேண்டும் மேலும் இது போய் சேரவேண்டியர்களுக்கு சரியாக சேரவேண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எனவே ஆங்கிலத்தில் பவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், என்ன நடக்கிறது தமிழகத்தில். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் தங்களுடைய ஆரோக்கிய வாழ்விற்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடினார்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இங்கோ தலைவர்களும், பிரபலங்களும் வெறும் இரங்கல்கள் மட்டும் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு நன்மையும் இல்லை. வெறும் இரங்கல்கள் மட்டும் ஒன்றும் செய்யாது. இதனால் இறந்தவர்கள் திரும்பி வரப்போகிறார்களா?. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேபோகிறது. மனசு வலிக்கிறது. முடியவில்லை என்றால் இந்த அரசு போய்விடவேண்டும். உங்களுக்கு மொழிதான் பிரச்சனையா..? இல்ல என் மொழிதான் பிரச்சனையா? நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். காரணம் இது போய் சேர வேண்டியர்களுக்கு சரியாக சேரவேண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு. பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. எங்களிடம் மோத முடியாது... ஏன் என்றால் நாங்கள் தமிழ் மக்கள் எனவே தமிழர்கள் கிட்ட மோதாதே. யுனைட் பார் ஹுமானிட்டி என ஆவேசமாக பேசியுள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு கர்நாடக மக்கள் ஒரு டம்ளரில் அங்குள்ள தமிழருக்கு தண்ணீர் கொடுத்து யுனைட் பார் ஹுமானிட்டி என்ற ஆஸ் டேக்கில் பதிவிட வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு தரபோவதாக கூறினார். இதனால் என்னவோ புதிதாக ஒரு தீர்வையோ அல்லது பரபப்பரப்பு கிளம்பும்படியான சவாலோ விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் என்னவோ அவரும் கண்டனம்தான் தெரிவித்தார். என்ன ஒன்று புதிதாக ஆங்கிலத்தில் கண்டனம் தெரிவித்தார்.