ஜிடிஏ (G.T.A.) 90's கிட்ஸின் தவிர்க்கமுடியாத கேம். காட் ஆஃப் வார், பெய்ன், கிரிக்கெட், ஃபுட் பால் என பல கேம்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் கேம் வாழ்க்கையை, ஜி.டி.ஏ. இல்லாமல் எழுதமுடியாது. சீட்களுக்கென தனி ஜெராக்ஸ், பி.டி.எஃப்., இவை இல்லையென்றால் நோட்டில் எழுதிவைத்து அதை வைத்துக்கொள்வது என அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு விளையாடத் தொடங்கினால் அடி தொம்சம்தான்.
ஜிடிஏ ஆக்ஷன், அட்வெண்ட்சர் வகையைச் சேர்ந்த வீடியோ கேம். ஜிடிஏவின் முதல் வெர்சன் 21 அக்டோபர் 1997ல்தான் வெளியானது. ஜிடிஏவின் அடுத்தடுத்த வெர்ஷன்களில் பெரும்பாலானவை அக்டோபரில்தான் வெளியானது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) என்பதன் சுருக்கம்தான் ஜி.டி.ஏ. ஒரு கதை (story mode) போன்று இந்த கேம் நடக்கும், அதில் ஒரு கதாபாத்திரம்தான் ப்ளேயர். அமெரிக்காவின் சில மாகாணங்களில் நடக்கும் இந்த கேம், டேவிட் ஜோன்ஸ், மைக் டெய்லி ஆகியோரால் உருவாக்கப்பட்டது, ராக் ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தால் டெவலப் செய்யப்படுகிறது. எவெர்க்ரீன் செல்லிங் வீடியோ கேம் அதாவது எப்போதும் மவுசு குறையாத கேம்களில் நான்காவது இடத்தில் ஜி.டி.ஏ. உள்ளது, அதுமட்டுமில்லை கேம் விமர்சகர்களால் ‘அடி தூள்’ என பாராட்டப்பட்டது இந்த கேம். ஜி.டி.ஏ. வெர்ஷன்களில் முக்கியமானது சேண்ட் ஆண்ட்ரெஸ் மற்றும் வைஸ் சிட்டி.
2004ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி மிக அதிக வரவேற்பு பெற்ற ஜி.டி.ஏ. சேண்ட் ஆண்ட்ரெஸ் (GTA san andreas) ப்ளே ஸ்டேஷன் 2 (playstation 2) வெர்ஷனில் வெளியானது. முன்பு வெளியான இரண்டு சீரிஸ்களின் சாயல்களிலேயே இருந்தாலும், புதுமையான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன. இது சிக்ஸ்த் ஜெனரேஷன் வீடியோ கேம் என அழைக்கப்பட்டது. மூன்றாம் நபரின் பார்வையில் (Third person view) விளையாடப்படும் இந்த கேம் மல்டி ப்ளேயர் ஆப்ஷன் கொண்டது. கார், பைக், சைக்கிள் முதல் குப்பை அள்ளும் இயந்திரம், அறுவடை இயந்திரம், ஹெலிகாப்டர், போட், ஸ்கை டைவ் பல வாகனங்கள் வெர்ஷனில் இருந்தது. இவைதவிர அவ்வப்போது வரும் கேங் வார், ரேஸ், போன்றவையும் சுவாரசியத்தை கூட்டும். இவைகளுக்கு நடுவே வரும் சிறு,சிறு மிஷன்கள் (mission) இப்படி பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் செல்லும் இந்த ஜி.டி.ஏ. சேண்ட் ஆண்ட்ரெஸ்.
ஜிடிஏ சேண்ட் ஆண்ட்ரெஸ்க்கு முன்பு வந்தது வைஸ் சிட்டி (vice city) 29.10.2002ல் (GTA san andreas) ப்ளே ஸ்டேஷன் 2 (playstation 2) வெர்ஷனில் வெளியானது. வழக்கமான அமெரிக்க கதைக் களத்தை கொண்டிருந்த இது, சிக்ஸ்த் ஜெனரேஷன் வகையைச் சேர்ந்தது. இந்த கேமில் நிறைய துப்பாக்கிகள், வாகனங்கள், முதல் மற்றும் மூன்றாம் நபரின் பார்வை ஆகியவை இருக்கும். குற்றங்கள் செய்வது, மாட்டிக்கொள்வது, கேங் ஃபைட், உதவி செய்வது, ரேஸ், என நிறைய மிஷன்கள் இருக்கும். இதுவும் அமெரிக்க தளத்தை அடிப்படையாக கொண்டது. மற்ற ஜிடிஏ வகைகளுக்கு சற்றும் குறையாத வகையில் பரபரப்பும், விறுவிறுப்பும் இருக்கும்.
மொத்தம் ஜிடிஏவில் 15 வெர்ஷன்கள் உள்ளன. இவைகளில் சில ஆண்ட்ராய்டு வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளன, பெரும்பாலனவை விண்டோஸ் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இன்றுவரை மவுசு குறையாத, குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஆட்கொண்டிருக்கின்ற முக்கிய ப்ளே ஸ்டேஷன் கேமாக ஜி.டி.ஏ. இருக்கிறது.