Skip to main content

ஜோதிகாவுடன் இணைந்த யோகிபாபு

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
yogibabu

 

 

 

ஜோதிகா - ராதாமோகன் கூட்டணியில் உருவாகும் 'காற்றின் மொழி' படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஆர்.ஜே வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. போஃப்டா சார்பில் ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்