இயக்குநர் ராதாமோகன் அடுத்ததாக வெப் தொடரை இயக்குகிறார். 'சட்னி - சாம்பார்' என்ற தலைப்பில் உருவாகும் இத்தொடரில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இத்தொடரை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இத்தொடர் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "இத்தொடர் முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில், "டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்" என்றார்.