கே.ஜி. எஃப் 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சலார் படத்தில் நடிகர் யஷ் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யஷ்ஷும், பிரபாஸும் ஒன்றாக திரையில் தோன்றவுள்ளது இப்போதே தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்திராஜ் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் இது குறித்த பேசிய பிரித்விராஜ், ”சலார் மிகப் பிரம்மாண்ட படம், அதில் நடிக்க வேண்டும் என்றால் பல மாதங்கள் கால்ஷீட் தேவைப்படும், அதனால் என்னுடைய அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்றார். கிட்டத்தட்ட இவரும் ஓகே சொல்லிவிடுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.