Skip to main content

பேருந்து ஓட்டுனரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் அத்தியாயம் 1

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
kgf

 

'பேருந்து ஓட்டுனரின் மகனாக, திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ் நடிப்பில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் படம் கே.ஜி.எப் அத்தியாயம் 1. இது கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1978-ல் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிபோரால் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகியது. அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டி படைத்தது. எண்ணெய், காப்பி, உலோகம், பருத்தி இதனுடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ண தொட்டது.  

 

70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில் கே.ஜி.எப்-ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது. அரசியல் தலைவர்கள் பன்னாட்டு பெரும் புள்ளிகள், மாஃபியாக்கள், இடையே நடந்த போட்டியில் எந்த பின்புலமின்றி சுயம்புவாக உருவாகிய ராக்கி (யஷ்) ”உனக்கு பின்னாடி ஆயிரம் பேர் இருக்றாங்கற தைரியம் இருந்துச்சினா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். ஆனா அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்குறேங்கற தைரியம் இருந்துச்சினா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்.” என்ற தாய்யின் வாக்கின்படி சூழ்ச்சிகளுக்கும் இரத்தகறைகளுக்கும் இடையே போராடிய அடிமைகளை மீட்டு கே.ஜி.எப் தங்கச் சுரங்கத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியதே கே.ஜி.எப் அத்தியாயம் 1 படத்தின் கதை கருவாகும்.

 

 

 

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பல காட்சிகளில் அதிக புழுதிபுயல் 10 அடி உயரத்திற்கு தேவைப்பட்டது. கம்ப்ரெஸ்ர்கள் மட்டுமின்றி கரும்புகையை உருவாக்க பழைய மண்ணெண்ணெய் மெஷின்களை வாங்கி அதன் மூலம் புழுதி புயல் ஒருவாக்கப்பட்டது. எழுபதுகளின் இறுதி என்பதுகளின் தொடக்கத்தில் கதை நடப்பதால் பிளாக் மற்றும் பிரௌன் கலர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தங்கச்சுரங்கத்தின் அரங்க அமைப்புகள் கோலார் தங்க வயலில் போடப்பட்டு புகை, புழுதி மற்றும் நெருப்புகளுக்கு இடையே 8 மாதங்கள் 4 ஆயிரம் துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் சினிமா லைட்டுகளை உபயோகிக்காமல் இயற்கையான லைட் சோர்ஸ்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டது.

 

நெருப்பு மற்றும் வத்திக்குச்சிகளால் மட்டுமே பல காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களினால் இரண்டரை வருடங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கன்னடத்தில் மட்டும் ரிலிஸ் செய்வதற்காக இந்த படம் தொடங்கப்பட்டது. படம் வளர வளர இதன் அசுர வளர்ச்சி எங்களை அனைத்து மொழிகளுக்கான படம் இது என்பதை உணர வைத்ததாக படத்தின் நாயகன் யஷ் கூறினார். யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா ஆகியோறது நடிப்பில் அன்பறிவு சண்டை இயக்கத்தில், ஸ்ரீகாந்த் படதொகுப்பில், கே.ஜீ.ஆர் அசோக் வசனத்தில், புவன்கவுடா ஒளிப்பதிவில், ரவி பசூரூர் இசையில், பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியுள்ளது. விஷால் பிலிம் பேக்டரியால் ரிலிஸ் செய்யப்படுகிறது. கே.ஜி.எப் அத்தியாயம் 1 திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி திரைபடம் டிசம்பர் 21 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன்... பில்டப்... நட்பு - வெளியான சலார் ட்ரைலர்

Published on 01/12/2023 | Edited on 02/12/2023

 

prbhas salaar trailer released

 

கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

 

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜுலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது.

 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன.  மேலும் நட்பிற்கு முக்கியதுவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் இடம்பெற்றது போல் ஹீரோவிற்கான பில்டப் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. படத்திற்கான புக்கிங் வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

Next Story

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திடுக்கிடும் தகவல்!

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Shocking information on Thiruvannamalai ATM robbery

 

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.