![Yami Gautam](http://image.nakkheeran.in/cdn/farfuture/jP0EBeeA79mvMvzewcKtvLuTQ6pM8GD9BH-pO-5vIwQ/1622890781/sites/default/files/inline-images/120_10.jpg)
தமிழ் சினிமாவில் கௌரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாமி கெளதம். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம்வரும் இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நான்கு தேசிய விருதுகளை வென்ற 'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தை இயக்கிய ஆதித்யா தார் என்பவரை இவர் திருமணம் செய்துள்ளார்.
'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திடீர் திருமணம் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள யாமி கெளதம், "குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.