பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையும் தாண்டி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துள்ள படம் என்பதால் ஜாம்பி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ள யாஷிகா, இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருப்பதோடு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறினார். ரசிகர்களுடன் மக்களுக்கு உதவி செய்ததாக கூறிய அவர், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் கூறினார்.

இந்த விழாவில் நடிகர் பிரேம்ஜியும் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த டீஷர்ட் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது அந்த டீ ஷர்ட்டில் முரட்டு சிங்கிள் என அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரேம்ஜி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த படத்தின் நாயகி யாஷிகா அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார். அதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் பேசப்படுகிறது. மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்துள்ள நீங்கள் எப்படி எங்கள் தலைவர் (பிரேம்ஜி) அருகில் அமரலாம் என்று அவரிடம் டுவிட்டரில் செல்ல சண்டை போடுகிறார்களாம் பிரேம்ஜி ரசிகர்கள். இருவருமே தங்களின் டுவிட்டர் பக்கங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.