கனா திரைப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தன் கல்லூரி காலத்தை பற்றியும் சினிமாத்துறைக்குள் தான் வந்தது பற்றியும் நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டதிலிருந்து.
என்ஜினியரிங் படிக்கலாம் இல்லை, சும்மா காலேஜ்க்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன். சினிமா அப்படினா என்னனு தெரியாம அதுக்குள்ள போய் மாட்டிக்ககூடாது. சினிமாவை பொறுத்தவரை வெளிய இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப எளிமையா இருக்கும். நம்மளும் போய் சாதிக்கலாம்னு தோணும் ஆனா, என்ன பண்ணா சாதிக்க முடியும்னு தெரியாது. அதனால் சரியான விஷயத்தின் மீது நம்பிக்கை வைப்பதுதான் சரி, அந்த சரியான விஷயம் சினிமான்னு எனக்கு என்ஜினியரிங் படிக்கும்போதுதான் தோணுச்சு. காரணம் காலேஜ் படிக்கும்போது எல்லா இன்டர் காலேஜ் ப்ரோக்ராம்கும் போவோம் அதுல நாங்கதான் ஜெயிப்போம். அப்போதான் தெரிஞ்சுது, நமக்கு பாட்டு எழுத வரும்னு.
நாங்க இன்னிக்கு இங்க இருக்கோம்னா அதுக்கு எங்க காலேஜ்தான் மிகப்பெரிய காரணம். நாங்க எப்போ போய் கேட்டாலும் உடனே ஓ.கே. சொல்லிடுவாங்க. படிப்பைவிட இதுபோன்ற விஷயங்களில் நமக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா அதை என்கரேஜ் பண்ணி அனுப்புவாங்க. அதனால்தான் எங்க காலேஜில் இருந்து நிறையபேர் சினிமாக்குள்ள இருக்காங்க. எங்க காலேஜில் இருந்து முதலில் சினிமாவுக்குள் வந்தது ‘முத்தமிழ்’ பாடலாசிரியர், அதுக்கு அப்புறம் ’சந்தோஷ் நாராயணன்’ அவர் எங்க சீனியர்தான்.