கடந்த 1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்று பாலசந்தர் இயக்கிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் விவேக். சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், காமெடியன் என்று வலம் வருகிறார். இக்கால உச்ச நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என்று பலருடனும் நடித்துவிட்டார் விவேக். இருந்தாலும் இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை.

கமல் ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என விவேக் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த கனவை நிஜமாக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விவேக் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.