ராட்சசன் படத்தில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து மீண்டும் ஒருமுறை இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
தெலுங்கில் இந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று ஜெர்ஸி. இப்படத்தில் ஹீரோவாக நானியும், ஹீரோயினாக ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடித்தனர். கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று நினைத்துகொண்டு வாழும் இளைஞன் ஒருவரின் வாழ்க்கை திருமணம் நடைபெற்றவுடன் அந்த கிரிக்கெட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் தன்னுடைய மகனின் ஆசைக்காக கிரிக்கெட்டில் கலந்துகொள்கிறார். அவர் சாதித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்த ஜெர்ஸி படத்தைதான் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இதில் அமலா பாலை விஷ்னுவுக்கு மனைவியாக நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
ராட்சசன் வெற்றிக்கு பின்னர் விஷ்னு விஷாலும் அமலா பாலும் காதலிக்கின்றனர், திருமணம் செய்துகொள்ள போகின்றனர் போன்ற கிசுகிசுகள் கிளம்பின. இதை நடிகர் விஷ்னு விஷால் முழுமையாக தவிர்த்து வந்தார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பே விஷ்னு விஷால் கிரிக்கெட் விளையாட்டில் நன்கு கைதேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. முன்னாள் ரஞ்சி வீரரான விஷ்னு ஏற்கனவே கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான ஜீவா படத்திலும் நடித்து ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.