Skip to main content

நடிகர் விமலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

vimal mannar vagaiyara check issue

 

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்து தயாரித்து வெளியான படம் 'மன்னர் வகையறா'. இப்படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றார் விமல். பெற்ற கடன் தொகையை படம் வெளியான பிறகு காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததாக கூறி விமல் மீது தயாரிப்பாளர் கோபி வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கு விசாரணைக்காக விமல் ஏற்கனவே ஆஜரான நிலையில் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் யாரும் முன்வரவில்லை. முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பு மனு தாக்கல் செய்தது. 

 

இதற்கு கோபி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமல் செயல்பட்டதாக கூறி ரூ.300 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம். மேலும் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்