
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்த விக்ரம் வேதா படம் கடந்த ஆண்டு வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றிகரமான ஓடி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. புஷ்கர் காயத்ரி இயக்கிய இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தமிழில் அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் உடன் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தியிலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரியே இயக்குகின்றனர். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.